November 14, 2025
மரத்தால் செய்யப்பட்ட முதல் செயற்கைக்கோள்….
தொழில் நுட்பம் புதிய செய்திகள்

மரத்தால் செய்யப்பட்ட முதல் செயற்கைக்கோள்….

May 30, 2024

லிக்னோசாட்(Lignosat) எனப் பெயரிடப்பட்ட மரத்தாலான செயற்கைக் கோளை ஜப்பானின் கியோட்டோ பல்கலைக்கழகமும் சுமிட்டொ ஃபாரஸ்ட்ரி என்ற நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளது.

இந்த மர செயற்கைக்கோள் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணத்திலுள்ள கென்னடி விண்வெளி மையத்திலிருந்து சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு ஏவப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்வெளியில் அவற்றின் தாங்கும் திறன்களைக் கொண்டு மக்னோலியா எனும் மரத்தினால் இந்த செயற்கைக்கோளானது உருவாக்கப்பட்டுள்ளது.

மேலும் 10 கன சென்டிமீட்டர் அளவு கொண்ட, இந்த செயற்கைக்கோள் சூரிய மின் தகடுகளால் பொருத்தப்பட்டுள்ள இந்த மர செயற்கைக் கோள்கள் பூமியில் நுழையும்போது எரிந்து காற்று மாசு அபாயத்தைக் குறைக்கும் எனக் கூறப்படுகிறது.

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *