Tamil News Channel

மருத்துவமனை பாதுகாப்பு பணியாளர் மீது தாக்குதல்!!

யாழ்ப்பாணம் போதனா வைதியசாலைக்குள் உந்துருளியுடன் நுழைந்தவர்  மருத்துவமனை பாதுகாப்பு பணியாளர் மீது தாக்குதல் நடத்திய சம்பவமொன்று  இடம்பெற்றுள்ளது.

இந்த சம்பவம் நேற்று  இரவு 10 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

வாள்வெட்டுக்கு இலக்காகி காயமடைந்த ஒருவரை உந்துருளியில் ஏற்றியவாறு வந்த நபரொருவர் விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவுக்குள் நுழைந்து சிகிச்சையளிக்குமாறு கோரியுள்ளார்.

இதன்போது ” உந்துருளியில் ஏன் உள்ளே வந்தீர்கள்” என கேட்ட மருத்துவமனை பணியாளரை  அலுவலக மேசையில் இருந்த அச்சு இயந்திரத்தால் தாக்கியுள்ளார்.

இதனையடுத்து மருத்துவமனை பணியாளர்கள் அவரை யாழ்ப்பாணம் பொலிஸாரிடம் ஒப்படைத்ததுடன் காயமடைந்த மருத்துவமனை பணியாளர் மற்றும் வாள்வெட்டில் காயமடைந்தவரும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

 

 

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts