கலபிடமட பொலிஸ் பிரிவிற்குட்பட்ட லெவங்கம பகுதியிலுள்ள வீடொன்றுக்கு நேற்று (20.08) மாலை நபர் ஒருவர் வந்து, பெண் ஒருவரைக் கொன்றதாகவும் மேலும் இரு பெண்களை காயப்படுத்தியதாகவும் கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அதலவத்த, லெவங்கம பகுதியைச் சேர்ந்த 55 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சந்தேக நபர் பணத் தகராறு தொடர்பாக மனைவி மற்றும் மனைவியின் தாயாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
பின் மனைவியின் தாயாரை கல்லால் தாக்கியதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டதுடன், படுகாயமடைந்த அவர் கரவனெல்ல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
மேலும் மனைவியையும் மகளையும் கூரிய ஆயுதத்தால் தாக்கியுள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் 44 வயதுடைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், கலபிடமட பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.