January 13, 2026
மர்மமான முறையில் உயிரிழந்த பெண்!!!
Updates உள்நாட்டுச்செய்திகள் புதிய செய்திகள்

மர்மமான முறையில் உயிரிழந்த பெண்!!!

May 17, 2024

யாழ்ப்பாணம் காளி கோவில் வீதி, தாவடி தெற்கு பகுதியை சேர்ந்த  31 வயதான இளம் குடும்பப் பெண் ஒருவர் நேற்று படுக்கையில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த பெண்ணின் கணவரும் மகளும் பிரான்ஸில் வசித்து வருகின்றனர்.

இந்நிலையில், இவர் இரவு (15) உணவருந்தி விட்டு தூக்கத்திற்கு சென்றுள்ள நிலையில் இன்று காலை படுக்கையில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இதனையடுத்து சடலம் மீட்கப்பட்டு வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு உடற்கூற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டுள்ளதுடன் மரணத்திற்கான காரணம் கண்டறியப்படவில்லை.

மேலும் பரிசோதனைகளுக்காக உடற்கூற்று மாதிரிகள் கொழும்பிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன் உயிரிழந்தவரின் சடலத்தை புதைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *