November 18, 2025
மர்மமான முறையில் மூவர் உயிரிழப்பு!!!
World News புதிய செய்திகள்

மர்மமான முறையில் மூவர் உயிரிழப்பு!!!

May 30, 2024

ஓமானில் Mabela Al Hain நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தங்கியிருந்த இலங்கை இளைஞர்கள் மூவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அத்துடன், குறித்த இளைஞர்களுடன் தங்கியிருந்த ஏனைய இருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இறப்புக்கான காரணம் கண்டறியப்படாத போதிலும், மாரடைப்பு காரணமாக அவர்கள் உயிரிழந்துள்ளதாக பிரேத பரிசோதனை அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

ஓமான் தூதரக அதிகாரிகளின் கூற்றுப்படி, உயிரிழந்தவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்கள் மஹியங்கனை, கிரந்துருகோட்டே மற்றும் கேகாலை ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பில் ஏற்கனவே ஓமானின் இலங்கை தூதரகம் வெளிவிவகார அமைச்சுக்கு அறிவித்துள்ளது.இந்நிலையில், உயிரிழந்த இளைஞர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு தகவல்களை வழங்குவதற்கான நடைமுறைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *