கம்பளை புப்புரஸ்ஸ நகரில் நேற்றைய தினம் தானம் வழங்குவதற்காக சமையல் வேலையில் ஈடுபட்டிருந்த தந்தையும் மகனும் அதிகாலையில் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளனர்.
குறித்த இருவரும் மின் பிறப்பாக்கி செயலிழந்தமையால் சமையல் வேலைகளை நிறுத்திவிட்டு அவ் அறையில் சிறிது நேரம் ஓய்வெடுத்துள்ளனர்.
இந்த நிலையில் கரப்பான் பூச்சிகள் அவர்கள் மீது திரிவதை கண்டு சக நண்பர்கள் அவர்களை எழுப்பியபோது இருவரும் அசைவற்று இருந்துள்ளனர்.
இதற்கமைய உடனடியாக இருவரையும் பன்விலதென்னை வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற பொழுது அவர்களை சோதனை செய்த வைத்தியர்கள் இருவரும் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.
மேற்படி சம்பவத்தில் சனத்ரோஹண (40வயது) என்பவரும் மகனான கனன மதுஷான் (17வயது) ஆகிய இருவரும் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.
இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.