இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மறைந்த முன்னால் தலைவர் இரா.சம்பந்தனின் இறுதிக் கிரியை இன்றைய தினம் இடம்பெறவுள்ளது.
அன்னாரின் சொந்த ஊரான திருகோணமலையில் அவரது இறுதிக் கிரியை இடம்பெறவுள்ளது.
இதனையடுத்து, கொழும்பில் உள்ள தனியார் மலர்சாலையொன்றில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த அவரது பூதவுடல் புதன்கிழமை நாடாளுமன்றில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.
பின்னர், அன்னாரின் பூதவுடல் யாழ்ப்பாணத்துக்கு கொண்டு செல்லப்பட்டு அஞ்சலிக்காக வைக்கப்பட்டதையடுத்து, திருகோணமலையில் உள்ள அவரது இல்லத்தில் இன்று நண்பகல் 12 மணிவரை அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ளது.
அதன்பின்னர் இரா.சம்பந்தனின் பூதவுடல் திருகோணமலை நகரினூடாக எடுத்துச் செல்லப்பட்டு இன்று மாலை 3 மணியளவில் இந்து பொது மயானத்தில் அடக்கம் செய்யப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Post Views: 2