July 8, 2025

கடலில் மிதந்த போத்தல் ஒன்றில் இருந்த திரவத்தை குடித்த மூன்று மீனவர்கள் உயிரிழந்துள்ளனர்.

தங்காலையில் இருந்து 320 கடல்மைல் தொலைவில் பயணித்துக்கொண்டிருந்த மீன்பிடி படகொன்றில் இந்த சம்பவம் பதிவாகியுள்ளது.

மேலும் மூவர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களுக்கு தேவையாக மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் கடற்படையினர் தெரிவித்தனர்.

குறித்த மீனவ படகு கரையை நோக்கி பயணிப்பதாக கடற்படை பேச்சாளர் கெப்டன் கயான் விக்ரமசூரிய தெரிவித்துள்ளார்.

தங்காலையில் இருந்து நேற்று மீன்பிடி நடவடிக்கைகளுக்காக குறித்த நீண்டநாள் மீன்பிடி படகு கடலுக்கு சென்றுள்ளதாக அவர் மேலும் கூறியுள்ளார்

டெவன் 5” நெடுநாள் மீன்பிடி படகில் இருந்த ஆறு மீனவர்களில் மற்றொருவரும் தற்போது உயிரிழந்துள்ளதாக கடற்றொழில் மற்றும் நீரியல் வள திணைக்களம் உறுதிப்படுத்தியுள்ளது.

இதன்படி உயிரிழந்த மீனவர்களின் எண்ணிக்கை 5 ஆக அதிகரித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *