July 14, 2025
மலேசியாவிலிருந்து நாடு கடத்தப்பட்ட இலங்கையர்..!
News News Line Top Updates புதிய செய்திகள்

மலேசியாவிலிருந்து நாடு கடத்தப்பட்ட இலங்கையர்..!

Apr 25, 2024

மலேசியாவில் இருந்து நாடு கடத்தப்பட்டவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்தாண்டு இலங்கைக்கும் மலேசியாவுக்கும் இடையில் சிறுவர் கடத்தல் கும்பலின் பின்னணியில் இருந்த பிரதான உள்ளூர் உதவியாளர், நேற்று மலேசியாவில் இருந்து நாடு கடத்தப்பட்டார்.

இதன் போது, கட்டுநாயக்க விமான நிலையத்தில் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தினால் அவர் கைது செய்யப்பட்டார்.

இலங்கை எல்லை முகவர் நிலையம் ஊடாக ஒரு வருட கால விசாரணையில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தும் வகையில் இந்த கைது இடம்பெற்றுள்ளது.

கடந்த திங்கட்கிழமை 14 வயது சிறுவனை அவரது தந்தையுடம் மலேசியாவுக்கு அழைத்து சென்றபோது குறித்த நபர்  கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர் நீண்ட காலமாக இரகசியமாக கண்கானிக்கப்பட்டு வந்தவர் என தெரியவந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *