வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் விஜித ஹேரத் இரு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு வியாழக்கிழமை (10) மலேசியா செல்லவுள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மலேசியப் பிரதமர் அன்வர் இப்ராஹிம் உள்ளிட்ட அந்நாட்டு அரசாங்கத்தின் முக்கிய பிரமுகர்களை அவர் சந்திக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அமைச்சர் விஜித ஹேரத் இந்த விஜயத்தின் போது ஆசிய அமைச்சர்கள் மாநாட்டிலும் பங்கேற்கவுள்ளார். இதன் போது அவுஸ்திரேலிய, ரஷ்ய மற்றும் பாக்கிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர்களுடனான சந்திப்பிலும் அமைச்சர் விஜித ஹேரத் கலந்து கொள்ளவுள்ளார்.
அதேவேளை வெள்ளிக்கிழமை (11) தென் கொரிய முதல் துணை அமைச்சருடனும், பங்களாதேஷ் வெளியுறவுத்துறை அமைச்சருடனும், பிலிப்பைன்ஸ் வெளிவிவகார அமைச்சருடனும் சந்திப்பில் ஈடுபடவுள்ளார். இதன் போது இலங்கைக்கும் குறித்த நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக உறவுகள் தொடர்பில் அவதானம் செலுத்தப்படவுள்ளது.



