January 20, 2026
மலேசிய பாராளுமன்றத்திலிருந்து செந்தில் தொண்டமானுக்கு விசேட அழைப்பு…!!
இலங்கை அரசியல் புதிய செய்திகள்

மலேசிய பாராளுமன்றத்திலிருந்து செந்தில் தொண்டமானுக்கு விசேட அழைப்பு…!!

Jul 8, 2024

மலேசியா பாராளுமன்றத்திற்கு கிழக்கு மாகாண ஆளுநரும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவருமான செந்தில் தொண்டமானுக்கு
டட்டுக் ஸ்ரீ சரவணன் முருகனால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

மூவின மக்கள் வாழும் நாடான இலங்கையில், மூவின மக்களுக்கும் பாரபட்சம் இன்றி சிறந்த தலைமைத்துவத்தை வழங்கும் தலைவர் என்ற ரீதியில் ஆளுநர் செந்தில் தொண்டமானுக்கு இந்த விசேட அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

மலேசியா பல்லின மக்கள் வாழும் ஒரு நாடு. அங்குள்ள இந்தியா வம்சாவளி தமிழர்களுடன், மூவின மக்களும் ஒன்றாக வாழ தான் முன்னெடுத்த வழிமுறைகள் குறித்தும், தனது தலைமைத்துவ பண்புகள் மற்றும் தொடர் வேலைத்திட்டம் குறித்து கலந்துரையாட கிழக்கு மாகாண ஆளுநரும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவருமான செந்தில் தொண்டமானுக்கு விசேட அழைப்பு விடுக்கப்பட்டதையடுத்து, இன்று செந்தில் தொண்டமான் மலேசியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *