Tamil News Channel

மஹரகம அபேக்ஷா வைத்தியசாலையில் கதிர்வீச்சு இயந்திரங்களில் பழுது!

image_50f362d637

மஹரகம அபேக்ஷா வைத்தியசாலையில் உள்ள ஐந்து கதிர்வீச்சு சிகிச்சை இயந்திரங்களில் மூன்று பழுதடைந்து 6 நாட்கள் ஆகின்ற நிலையில், குறித்த இயந்திரங்கள் இன்றுவரை பழுதுபார்க்கப்படவில்லை என அரச கதிரியக்க தொழில்நுட்ப வல்லுநர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக கடந்த 7 ஆம் திகதி முதல் நாளாந்தம் சுமார் 250 நோயாளிகளுக்கான கதிர்வீச்சு சிகிச்சை நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பழுதடைந்த கதிர்வீச்சு இயந்திரங்களில் குழந்தைகளுக்கு சிகிச்சையளிப்பதற்கு பயன்படுத்தப்படும் இயந்திரங்களும் உள்ளடங்குவதாக குறிப்பிடப்படுகிறது.

 

 

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts