மாத்தறை – கனங்கே பகுதியில் மாடுகளை ஏற்றிச் சென்ற லொறி ஒன்றின் மீது பொலிஸாரால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.

கனங்கே – ரஜமஹா விகாரைக்கு அருகில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த பொலிஸார், பசு மாடொன்றை ஏற்றிச் சென்ற லொறியினை சோதனைக்காக நிறுத்துமாறு உத்தரவிட்டுள்ளனர்.

இருப்பினும், உத்தரவை மீறி லொறி சென்ற நிலையில் லொறியை  குறி வைத்து பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.

இதன்போது, லொறியிலிருந்த மூவரில் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளதுடன், சிகிச்சைக்காக  கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அத்துடன் இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை  பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here