கற்பிட்டி – கண்டக்குளி வெல்ல பகுதியில் 14 வயதுடைய மாணவனை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக கூறப்படும் பெண்ணொருவரை நேற்று முன்தினம் (17.08) கைது செய்துள்ளதாக கற்பிட்டி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதன்படி 54 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாய் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.

பாதிக்கப்பட்ட குறித்த மாணவன் செய்த முறைப்பாட்டுக்கு அமைய, சந்தேக நபரான பெண்ணை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் கைது செய்யப்பட்ட சந்தேக நபரான குறித்த பெண் பாதிக்கப்பட்ட அந்த மாணவனின் உறவினர் என விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்நிலையில் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படும் மாணவன் மருத்துவ பரிசோதனைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் கற்பிட்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here