அமெரிக்க பாடசாலையொன்றில் மாணவன் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் உயிரிழந்துள்ளதுடன் பலர் காயமடைந்துள்ளனர்.
அமெரிக்காவின் ஜோர்ஜியாவின் பாரோ கவுண்டி மாகாணத்தில் அப்பலாஜியில் உள்ள உயர்நிலைப் பாடசாலையில் நேற்று 14 வயது மாணவன் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் இரு ஆசிரியர்கள் மற்றும் இரு மாணவர்கள் உயிரிழந்துள்ளதுடன் 30இற்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
துப்பாக்கிச்சூடு நடத்திய நபரை பொலிஸார் கைது செய்து விசாரணையில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடப்பட்டுள்ளது.