பரசங்கஸ்வெவ – பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் 15 வயது மாணவனை தாக்கிய சம்பவத்தில் அதே பாடசாலையின் எட்டு மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மெதகம, அம்பகஸ்வெவ மற்றும் பரசங்கஸ்வெவ பிரதேசங்களைச் சேர்ந்த 10ஆம் தரத்தில் கல்வி கற்கும் 15 வயதுடைய எட்டு மாணவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.