
மாணவர்களுக்கு கேரளா கஞ்சாவினை விற்பனை செய்தவர் கைது…!
நீண்ட காலமாக பாடசாலை மாணவர்களுக்கு கேரளா கஞ்சாவினை விற்பனை செய்து வந்த நபரினை பெரிய நீலாவணை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
அம்பாறை மாவட்டம் பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் கேரளா கஞ்சா விற்பனை செய்வதாக கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய பொலிஸார் சந்தேகநபரை கைது செய்துள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர் 36 வயதுடைய குடும்பஸ்தர் என்பதுடன் அவரிடம் இருந்து 11,100 மில்லி கிராம் கேரளா கஞ்சா பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
மேலும் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பெரியநீலாவணை பொலிஸார் மேற்கொண்டுவருவதுடன், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவும் நடவடிக்கை எடுத்துள்ளனர்.