மதுரங்குளி , கணமூலையைச் சேர்ந்த 40 வயதுடைய போதையை ஏற்படுத்தும் மதன மோதக லேகியத்தை விற்பனை செய்த நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
மேலும் பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவல் அடிப்படையில், குறித்த பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது சந்தேக நபரிடமிருந்து 12 இலட்சத்து 75 ஆயிரம் ரூபா பெறுமதியான 4250 மதன மோதக லேகிய உருண்டை கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்தே விற்பனை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிதுள்ளனர்.