November 14, 2025
மாணவர்கள் தொடர்பில் வெளியான தகவல்..!
News News Line Top Updates புதிய செய்திகள்

மாணவர்கள் தொடர்பில் வெளியான தகவல்..!

Apr 19, 2024

எதிர்வரும் நாட்களில் பாடசாலை மாணவர்கள் நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனரா என்பதை கண்டறிய விசேட கணக்கெடுப்பு நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த தகவலை சமூக மருத்துவ நிபுணர் ஷெரின் பாலசிங்கம் தெரிவித்துள்ளார்.

நீரிழிவு நோய் பாதிப்பு குறித்து அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

பாடசாலை மாணவர்களை மையப்படுத்தி நடத்தப்பட்ட சோதனையில் உடல் பருமன், உயரத்துக்கு ஏற்ற எடை இல்லாமை ஆகிய இரண்டு காரணிகள் கண்டறியப்பட்டுள்ளது.

அத்துடன், நகர்ப்புறங்களில் உள்ள பெரும்பாலான குழந்தைகள் இந்த ஆபத்துக் காரணிகளால் உயிரிழந்து இருப்பது தெரியவந்ததாகவும் அவர் கூறினார்.

மேலும், பாடசாலை சிற்றுண்டிச்சாலைகளில் விற்பனை செய்யப்படும் உணவு தொடர்பில் சுகாதார அமைச்சினால் (Ministry of Health)  முன்னர் தயாரிக்கப்பட்ட ஆலோசனை தொடர் தற்போது செயலிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *