November 14, 2025
மாணவிகளை பகிடிவதை செய்த 6 மாணவர்கள் கைது..!
News News Line Top Updates புதிய செய்திகள்

மாணவிகளை பகிடிவதை செய்த 6 மாணவர்கள் கைது..!

Jan 29, 2024

சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவிகளை பகிடிவதை செய்த குற்றச்சாட்டில் 6 மாணவர்கள் பொலிஸாரால்  நேற்றைய தினம்  (28) கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட 23, 24 மற்றும் 25 வயதுடைய 6 மாணவர்களும் அதே பல்கலைக்கழகத்தின் சமூக விஞ்ஞான மற்றும் மொழிக் கல்வி பீடத்தில் இறுதி ஆண்டில் கல்வி கற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பகிடிவதை தொடர்பில் கடந்த 14ஆம் திகதி 1997 என்ற தொலைபேசி இலக்கத்தின் மூலம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதற்கமைய மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் மாணவர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சமனலவெவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *