நடிகர் விஜய் ஆரம்பித்துள்ள தமிழக வெற்றிக் கழகத்தை மாநில கட்சியாக பதிவு செய்வதற்கான விண்ணப்பத்தை தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொண்டுள்ளது.
குறித்த கட்சியை பதிவு செய்வதற்கான விண்ணப்பத்தை நடிகர் விஜய் தரப்பினரால் கடந்த பெப்ரவரி மாதம் வழங்கப்பட்டது.
அந்த விண்ணப்பத்தை தேர்தல் ஆணையம் பதிவு செய்யாமல் நிலுவையில் வைத்ததிருந்ததாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.
இதனையடுத்து நடிகர் விஜயின் கட்சி விபரங்களை ஏற்று விண்ணப்பதை தேர்தல் ஆணையம் பெற்றுக்கொண்டுள்ளது.
அத்துடன் கட்சி தொடர்பில் ஏதாவது ஆட்சேபனைகள் இருந்தால் அதனை எதிர்வரும் 11ஆம் திகதிக்குள் தெரிவிக்க வேண்டும் என கால அவகாசம் விதித்துள்ளது.
எவ்வித ஆட்சேபனைகளும் இல்லாத பட்சத்தில் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தை மாநில கட்சியாக பதிவு செய்து இம் மாத இறுதிக்குள் தேர்தல் ஆணையம் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.