Tamil News Channel

மாபெரும் இசை நிகழ்ச்சிக்காக யாழ்ப்பாணத்திற்கு வருகை தரும் நடிகை…

டிசம்பர் மாதம் 21ம் திகதி தென்னிந்திய பிரபல பாடகர் ஹரிஹரனின் மாபெரும் இசைநிகழ்ச்சி யாழ்ப்பாணம் முற்றவெளி அரங்கில் நடைபெறவுள்ளது.இந்த நிகழ்ச்சிக்காக , யாழ்ப்பாண புலம்பெயர் தொழிலதிபரை திருமணம் செய்த 90 களின் கனவுக்கன்னி நடிகை ரம்பா யாழ்ப்பாணத்திற்கு வருகை தரவுள்ளதாக கூறப்படுகின்றது.

Magic Home குழுவின் யாழ் வருகையை பிரபலப்படுத்தும் நோக்கத்தோடு, இந்த பிரமாண்ட இசை நிகழ்ச்சியை ஹரிஹரன் தலைமையில் யாழ்ப்பாணத்தில் நடத்தவுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் கூறியுள்ளனர்.

இது முற்றிலும் ரசிகர்களுக்கு இலவசமாக நடத்தப்பட்ட உள்ளதாக தெரிவிக்கப்படும் நிலையில் இதற்கான டிக்கெட்ஸ், இனி வரும் நாட்களில் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த குழு வழங்குவதாக தெரிவித்துள்ளனர்.

இந்த பிரம்மாண்ட நிகழ்ச்சிக்கு நடிகை ரம்பா சிறப்பு விருந்தினராக வர உள்ளாராம், மேலும் இந்த நிகழ்ச்சியை ரம்பாவின் கணவரான இந்திரகுமார் -பத்மநாதன் ஏற்பாடுசெய்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

அதேவேளை கனடா வாழ் புலம்பெயர் தமிழரான இந்திரன் -பத்மநாதன் பிரபல தொழில் அதிபர் என்பதும் , அண்மையில் யாழ்ப்பாணம் காங்கேசன் துறையில் அமைந்துள்ள ஜனாதிபதி மாளிகையை 50 வருட காலத்திற்கு குத்தகைக்கு எடுத்திருப்பதாகவும் தகவல் வெளியாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts