வெல்லவாய, கொட்டவெஹெரகலயாய பிரதேசத்தில் வசிக்கும் பதினைந்து வயதுடைய இரண்டு மாணவிகள் நேற்று (15) முதல் காணாமல் போயுள்ளதாக வெல்லவாய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வெல்லவாய பிரதேசத்தில் உள்ள தேசிய பாடசாலை ஒன்றில் பத்தாம் தரத்தில் கல்வி கற்கும் இரு மாணவிகளே இவ்வாறு காணாமல் போயுள்ளார்கள்.
ஒருவர் கொட்டவெஹெரகலயாய பிரதேசத்தில் வசித்து வருவதுடன், அதே கிராமத்தில் வசிக்கும் இவரது நண்பி ஒருவர் 14ஆம் திகதி மாலை அவரது வீட்டிற்கு கல்வி கற்பதற்காக வந்துள்ளதாகப் பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
மறுநாள் காலை இரண்டு பெண்களும் வீட்டில் இல்லையென அப்பெண்ணின் தாய் வெல்லவாய பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.