
மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்பட்ட விசேட சலுகை….!
ஜனாதிபதித் தேர்தலில் மாற்றுத் திறனாளிகள் வாக்களிப்பதற்கு வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளதாக, தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதற்கென இவர்களுக்கு தற்காலிக அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிப்பதற்காக தேசிய அடையாள அட்டை, செல்லுபடியாகும் வாகன அனுமதிப்பத்திரம், செல்லுபடியாகும் கடவுச்சீட்டு, சமூக சேவைகள் திணைக்களத்தினால் வழங்கப்பட்ட முதியோர் அடையாள அட்டை, ஓய்வூதியத் திணைக்களத்தினால் வழங்கப்பட்ட ஓய்வூதியம் பெறுபவரின் அடையாள அட்டை ஆகியவற்றை பயன்படுத்த முடியும்.
இவை எதுவுமே இல்லாதவர்கள் ,தமது பிரிவு கிராம சேவை உத்தியோகத்தரின் மூலம் தேர்தல் அலுவலகத்திற்குச் சென்று தற்காலிக அடையாள அட்டையைப் பெற்றுக்கொள்ளலாம்.இதைப்பயன்படுத்தி மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.