இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை கேலி செய்யும் வகையில் சமூக ஊடகங்களில்
அறிக்கைகளைப் பதிவிட்ட மூன்று அமைச்சர்களை மாலைத்தீவு அரசாங்கம்
இடைநிறுத்தியுள்ளது.
இச் சம்பவத்தை தொடர்ந்து இரு நாடுகளுக்குமிடையிலான முறுகல் ஏற்பட்டுள்ளதென
சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
அமைச்சர்களான மல்ஷா ஷெரிப், மரியம் ஷியூனா, அப்துல்லா மஹ்சூம் மஜிட் ஆகிய
மூவருமே இவ்வாறு இடைநிறுத்தப்பட்டுள்ளனர். மேலும் அமைச்சர் மரியம் ஷியூனா உள்ளிட்டவர்கள் இந்திய பிரதமர் லட்சதீவுக்கு
மேற்கொண்ட விஜயம் குறித்து தெரிவித்துள்ள கருத்துக்கள் அரசின் கருத்துக்களை
பிரதிபலிப்பவையல்ல என்று குறிப்பிட்டுள்ள மாலைத்தீவு அரசாங்கம் சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்கப்படுமென்றும்
தெரிவித்துள்ளது.
இதேவேளை, பிரதமர் மோடிக்கு எதிராக எம்.பி களில் ஒரு பிரிவினர் தரக்குறைவான
கருத்துகளைத் தெரிவித்துள்ளதால் மாலைத்தீவு அரசாங்கம் இந்திய மக்களிடம் முறைப்படி
மன்னிப்பு கேட்க வேண்டுமென்றும் மாலைத்தீவின் பாராளுமன்ற உறுப்பினரும்
முன்னாள் பிரதி சபாநாயகருமான ஈவா அப்துல்லா கருத்து வெளியிட்டுள்ளார் .