கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் வழியாக சுங்கச் செலுத்தாமல் நாட்டிற்குள் கடத்தப்பட்ட ரூ.10 மில்லியனுக்கும் அதிக மதிப்புள்ள மொபைல் போன்கள், வாசனை திரவியங்கள் மற்றும் மின்னணு சாதனங்கள் உள்ளிட்ட பொருட்கள் மாளிகாவத்தையில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இச் சம்பவம் தொடர்பில் நால்வர் மாளிகாவத்தை பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மாளிகாவத்தை பகுதியிலுள்ள வீடு ஒன்றில் நடத்தப்பட்ட சோதனையின் போது இந்த பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிசார் தெரிவித்தனர்.
கைதான நபர்களில் இருவர் உறவினர்கள் என்றும், அவர்கள் மாளிகாவத்தை மற்றும் கொச்சிக்கடை பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சந்தேக நபர்கள் கடந்த செப்டம்பர் 30ஆம் திகதி துபாய்க்கு பயணித்து, அக்டோபர் 2ஆம் திகதி நாடு திரும்பியதுடன், சட்டவிரோதமாக இந்த பொருட்களை நாட்டிற்குள் கொண்டுவந்துள்ளதாக கூறப்படுகிறது.
தற்போது, சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் மாளிகாவத்தை பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.







