Tamil News Channel

மாவட்ட தொற்று நோய் வைத்தியர் ரஞ்சனின் ஊடக சந்திப்பு..!

```````

மாவட்ட தொற்று நோய் வைத்தியர் ரஞ்சனின் ஊடக சந்திப்பு நேற்று கிளிநொச்சி பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் இடம்பெற்றது. இதன்போது வைத்தியர் ரஞ்சன் நீர் வெறுப்பு நோய் தொடர்பில் தெரிவித்தார்.

அண்மையில் நீர் வெறுப்பு நோய் என சந்தேகிக்கப்படும் குழந்தை ஒன்று காலமாகியுள்ளது. அதனைத் தொடர்ந்து குறித்த நோய் தொடர்பில் கூறக்கடமைப்பட்டுள்ளேன்.

நீர்வெறுப்பு நோயானது நாய், பூனை போன்ற பாலூட்டும் விலங்குகளால் எமக்கு தொற்றக் கூடிய ஒரு நோயாகும். இந்த நோயானது கடி மற்றும் கீறல் மூலம் கடுமையாக தொற்றும் ஆற்றலைக் கொண்டதாகும்.

நாங்கள் வளர்க்கும் பிராணிகளுக்கு தடுப்புக்களை ஏற்றுவதன் மூலம் இந்த நோய் பரவலை தடுக்க முடியும். இந்த நோய் வெறுப்பு நோய்த்தாக்கத்துக்கு உள்ளாகும் ஒருவர் மிக விரைவாக இறந்துவிடக்கூடும். ஆகையால் நாங்கள் கவனமாக இந்த விடயத்தை கையாள வேண்டி உள்ளது.

இந்த நீர்வெறுப்பு நோயை தடுப்பதற்கு 3 விடயங்களை கையாளலாம். நாங்கள் ஒரு நாய்க்குட்டியை தத்தெடுத்தவுடன் முதல் 6 வாரத்துக்குள் முதலாவது ஊசியையும், 6வது மாதத்தில் 2வது ஊசியையும், அதனைத்தொடர்ந்து 1 வருடத்தில் மூன்றாவது ஊசியையும் செலுத்துவதுடன் பின்னர் வருடம் தோறும் ஊசியை வழங்குவதன் ஊடாக செல்லப்பிராணிகளிடமிருந்து பரவுவதை தடுக்கலாம்.

அவ்வாறு விலங்கினால் கடியுறுகின்ற போது, கிளிநொச்சி மாவட்டத்தில் 6 வைத்தியசாலைகளில் ARV தடுப்பூசியினையும், ARS தடுப்பூசியினையும் வழங்கிக் கொண்டிருக்கின்றோம்.

பளை, தர்மபுரம், பூநகரி, முழங்காவில், அக்கராயன் மற்றும் கிளிநொச்சி வைத்தியசாலையிலும் ARV தடுப்பூசி வழங்கப்படுவதுடன், ARS என்கின்ற விசேட தடுப்பு மருந்தினை கிளிநொச்சி வைத்தியசாலையிலும் பெற்றுக்கொள்ள முடியும்.

இதைவிட விலங்குகளுக்கான தடுப்பூசிகள் கால்நடை வைத்தியர் குழுவிற்கு மேலதிகமாக எங்களுடைய பிராந்திய சுகாதார சேவையில் கீழ் ஒரு குழுவினர் தொடர்ச்சியாக இயங்கிக் கொண்டிருக்கின்றார்கள்.

இந்தக் குழந்தையின் இறப்பின் மாதிரிகளை நேற்று 10 மணியளவில் யாழ் போதனா வைத்தியசாலையிலிருந்து கொழும்புக்கு அனுப்பியுள்ளோம். மாதிரி வந்த பின்னரே இது நீர்வெறுப்பு நோயா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள முடியும்.

அதுவரையான காலப்பகுதியில் நாங்கள் முற்காப்பு நடவடிக்கைகளை எடுத்துள்ளோம். அந்த வீட்டுக்கு சென்று அவதானிப்புக்களை மேற்கொண்டிருந்தோம். உறவினர்கள் மற்றும் கடியுற்றவர்களுக்கும் தடுப்பு மருந்துகளை ஏற்றியுள்ளோம். அத்துடன் அப்பிரதேசத்தில் உள்ள நாய்களிற்கு தடுப்பு ஊசிகளை ஏற்றியுள்ளோம். ஏனைய பகுதிகளில் அடுத்த வாரம் இதனை செய்யுவுள்ளோம்.

ஒரு கடி ஒன்று நிகழும் போது அடுத்த 10 நிமிடங்களிற்குள் பெறாடின் அல்லது சவர்க்காரம் கொண்டு அந்த பகுதியை நன்றாக களுவ வேண்டும். தொடர்ந்து நான் கூறிய அருகில் உள்ள ஏதாவது ஒரு வைத்தியசாலையில் ARV ஊசியை பெற்றுக் கொள்ள வேண்டும்.

ஏனைய தடுப்பூசிகள் ARV தடுப்பூசிக்கு இணையானது இல்லை. நாங்கள் தடுப்பூசியை பெற்றுவிட்டு ARV தடுப்புக்கள் கிடைக்கும் என எதிர்பார்ப்பது தவறானதாகும். இந்த நோய்க்கு 4 ஊசிகளை இரண்டு கைகளிலும் போட வேண்டும். கடி காயம் பாரதூரமாக இருந்தால் மேலதிகமாக ARS ஊசியையும் முழுமையாக பெற்றுக்கொள்ள வேண்டும்.

குறித்த குளந்தையை நாய் கடித்ததற்காக சிகிச்சைக்கு அழைத்து சென்ற போது வைத்தியர்கள் தடுப்பூசி அட்டையை பரிசிலிக்காது விட்டமை தொடர்பில் அவரிடம் வினவிய போது,

நாங்கள் அது தொடர்பாக அவதானிப்பை முழுமையாக மேற்கொண்டிருந்தோம். நாங்கள் குற்றம் சாட்டுவதன் மூலம் எதையும் அடைய முடியாது.

நாய்க்கு ஊசி வழங்கப்பட்டதா என அந்த வைத்தியசாலையில் கேள்வி கேட்கப்பட்டுள்ளது. அவர்கள் ஆம் என பதிலளித்துள்ளனர்.

2022ம் ஆண்டு நாய்களுக்கு செலுத்துகின்ற 800 தடுப்பூசிகள் பாதுகாப்பாக வைக்கப்பட்டு செயல் இழந்த நிலையில் நாங்களுக்கு செலுத்தப்பட்டதாக கூறப்படுவதுடன், இது தொடர்பாக சுகாதார உயர் இடங்களுக்கு கடிதங்கள் வழங்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது என அவரிடம் வினவியபோது,

இந்த விடயம் தொடர்பில் தான் எதுவும் அறிந்திருக்கவில்லை என அவர் இதன் போது அறிவித்தார்.என எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts