மாவனெல்லை பிரதேசத்தில் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த 13 வயது சிறுவன் லொறி மோதியதில் உயிரிழந்துள்ளார்.
நேற்று (23) மாலை 5.20 மணியளவில் தஸ்வத்தை ஊடாக உஸ்ஸாபிட்டிய உதுவான்கந்த வீதியில் தஸ்வத்தை பாலத்திற்கு அருகில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மின்சார சபைக்கு சொந்தமான லொறியில் மோதுண்ட சிறுவன், படுகாயங்களுடன் மாவனெல்லை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார்.
உஸ்ஸாபிட்டிய ரிவிசந்த மத்திய பாடசாலையில் 08 ஆம் தரத்தில் கல்வி கற்கும் தினுவர என்ற சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் லொறியின் சாரதியை பொலிஸார் கைது செய்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.