மா மரம் ஒன்றின் இலையானது வழக்கத்துக்கு மாறாக 60cm நீளத்தில் மிகப்பிரமாண்டமாக வளர்ச்சியடைந்து காணப்படுகின்ற அதிசயம் சாவகச்சேரியில் நிகழ்ந்துள்ளது.
சாதாரணமாக ஒரு மாவிலையானது 34 சென்ரிமீற்றர் நீளமுடையதாகவே இருக்கும்.
ஆனால் இந்த மாமர இலையானது சுமார் 60 சென்ரிமீற்றர் நீளமும் 20 சென்ரிமீற்றர் அகலமும் உடையதாக காணப்படுகின்றது.
சாவகச்சேரி டச் வீதியில் உள்ள மானா என்பவரின் வீட்டு முற்றத்தில் உள்ள மாமர இலையே இவ்வாறு வழமைக்கு மாறாக பிரமாண்டமாக வளர்ச்சி அடைந்துள்ளது.
இதனை அப்பகுதி மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து செல்கின்றனர் என எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
Post Views: 2