முந்தல் 12 ஏக்கர் பகுதியில் மின்சாரம் தாக்கி இருவர் உயிரிழந்தனர்.
குறித்த பகுதியில், நேற்று இரவு இந்த சம்பவம் இடம்பெற்றதாக காவல்துறையினர் தெரித்துள்ளனர்.
இதில், 52 மற்றும் 55 வயதுடைய இருவரே உயிரிழந்ததாகக் குறிப்பிடப்படுகிறது.
இவர்கள் இருவரும் தமது குடியிருப்புக்கு அருகில் வர்த்தக நிலையமொன்றை நடத்தி வந்த நிலையில், அதற்கு வீட்டிலிருந்து கம்பி மூலம் மின்சாரத்தைப் பெற்றுள்ளனர்.
எனினும், அந்த கம்பியில் ஏற்பட்ட பழுதை சரிசெய்வதற்கு முற்பட்ட கணவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார்.
அவரைக் காப்பாற்றுவதற்கு முயற்சித்த மனைவியும் மின்சாரம் தாக்கி உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
பிரதேச மக்கள் இருவரையும் மீட்டு முந்தல் மாவட்ட வைத்தியசாலையில் அனுமதித்த போதிலும், அவர்கள் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.