இபலோகம பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட புளியங்குளம் பகுதியில் மின்சாரம் தாக்கி 35 வயதுடைய ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவர் தனது வீட்டிற்கு அருகில் உள்ள காணியொன்றிற்குச் சென்றிருந்த போது காணியைச் சுற்றியிருந்த மின்சார வேலியில் சிக்கி உயிரிழந்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதனையடுத்து இந்த காணியின் உரிமையாளர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
உயிரிழந்தவரது சடலம் அநுராதபுரம் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.