Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

― Advertisement ―

spot_img

பிரேசில் முன்னாள் ஜனாதிபதி பொல்சோனாரோ வீட்டுக் கைது – அதிகார துஷ்பிரயோகம் வழக்கில் உச்சநீதிமன்ற உத்தரவு!

2022 தேர்தலில் தோல்வியடைந்த பிறகு அதிகாரத்தில் ஒட்டிக்கொள்ள சதித்திட்டத்தை மேற்பார்வையிட்டதாக குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ஜெய்ர் போல்சனாரோவை வீட்டுக் காவலில் வைக்க பிரேசிலின் உச்ச நீதிமன்றம் திங்களன்று உத்தரவிட்டது. புதிய நடவடிக்கைகள் ,...
Homeஉள்நாட்டுச்செய்திகள்மின்சாரம் தாக்கி மாணவன் பலி…!

மின்சாரம் தாக்கி மாணவன் பலி…!

அனுராதபுரம் – கலென்பிந்துனுவெவ பகுதியில் மின்சாரம் தாக்கி பாடசாலை மாணவரொருவர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த மாணவர் கலென்பிந்துனுவெவ பகுதியைச் சேர்ந்த 15 வயதுடையவர் எனவும் அப்பகுதியில் அமைந்துள்ள பாடசாலையொன்றில் கல்வி கற்பவர் என்றும் கூறப்படுகிறது.

தனது வீட்டின் பின்புறம் உள்ள குளியல் அறையில் குளித்துக்கொண்டிருந்தபோது, தண்ணீர் எடுப்பதற்காக மின் மோட்டார் இயக்கப்பட்டுள்ளது.

மின் மோட்டாரில் பொருத்தப்பட்டிருந்த கம்பியில் அவரது ஆடைகள்  வைக்கப்பட்டிருந்த நிலையில், குளித்துவிட்டு ஆடைகளை எடுக்க முற்பட்டபோது மின்கம்பி அறுந்து உடலில் சுற்றியதில் மின்சாரம் தாக்கி மாணவர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Verified by MonsterInsights