December 13, 2025
மின்சார கட்டண திருத்தம் தொடர்பில் கருத்துக்களை கோர நடவடிக்கை..!
புதிய செய்திகள்

மின்சார கட்டண திருத்தம் தொடர்பில் கருத்துக்களை கோர நடவடிக்கை..!

Jul 9, 2024

இலங்கை மின்சார சபையினால் முன்மொழியப்பட்டுள்ள மின்சார கட்டண திருத்தம் தொடர்பில் பொதுமக்களின் வாய்மூல கருத்துக்கள் இன்று (09.07) பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.

மின்சார சட்டத்தின் பிரகாரம் இந்த வருடம் மின் கட்டண திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளதுடன், அதற்கு முன்னதாக இந்த பொது கலந்தாய்வு நடத்தப்பட்டுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

இதன்படி, வாய்மூல பொது அணுகல் அமர்வு இன்று பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் காலை 08.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை நடைபெற்றது.

பல்வேறு மின்சார நுகர்வோர் குழுக்கள், தொழிற்சாலைகள் மற்றும் நிறுவனங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் சுமார் 50 பேர் இன்று உத்தேச மின்சார கட்டண திருத்தம் தொடர்பில் கருத்து தெரிவிக்க பதிவு செய்துள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

மின் கட்டண திருத்தம் தொடர்பான இறுதி முடிவு ஜூலை 15ஆம் தேதி பொது கலந்தாய்வுக்குப் பிறகு அறிவிக்கப்பட உள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *