இலங்கை மின்சார சபை 2023 ஆம் ஆண்டிற்கான அபரிதமான இலாபத்தை அடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
2023 டிசம்பர் 31ஆம் திகதியன்று கணக்காய்வு அறிக்கையின்படி 61.2 பில்லியன் ரூபாய்களை இலங்கை மின்சார சபை இலாபமாக பெற்றுள்ளது.
ஏனைய முதலீடுகளையும் சேர்த்து 75.7 பில்லியன் ரூபாய்கள் சபை இலாபமாக பெற்றுள்ளது.
இதில் கடந்த ஒக்டோபர் முதல் 18வீத கட்டண அதிகரிப்பினால் 21 பில்லியன் ரூபாய்கள் இலாபமாக கிடைத்துள்ளன.
பெரும்பாலும் கடந்த ஆண்டு அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலேயே அதிக இலாபம் கிடைத்துள்ளது.
செப்டெம்பர் மாதம் முதல் நாடு முழுவதும் பெய்த பாரிய மழையினால் இவ்வாறான வருமானம் சாத்தியமாகியுள்ளதாக தொழிற்துறை வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.
இதனால் எண்ணெய் மற்றும் நிலக்கரி அடிப்படையிலான உற்பத்தியை வியத்தகு முறையில் மின்சாரசபையினால் குறைக்க முடிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.