கடந்த 10 மாதங்களில் 544,488 மின் துண்டிப்புக்களும் மின் இணைப்புக்களும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
இலங்கை மின்சார சபை 50 இலட்சம் மின் பாவணையாளர்களுக்கு சிவப்பு கட்டணப் பட்டியலை வழங்குவதாக வெளியாகும் செய்திகள் தொடர்பில் இலங்கை மின்சார சபை அறிவிப்பொன்றை வெளியிட்ட்டுள்ளது.
குறித்த அறிவிப்பில், மின்சாரம் பயன்படுத்திய ஒரு மாதத்தின் பின்னரே மின் கட்டணத்தை செலுத்த வேண்டும்.
இக்கட்டணத்தை உரிய நேரத்தில் செலுத்த தவரும் பட்சத்தில் சிவப்பு பட்டியல் வழங்கப்படும்.
சிவப்பு பட்டியல் வழங்கப்பட்ட பின்னர் 10 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டு மின்சாரம் துண்டிக்கப்படுவது தொடர்பில் நுகர்வோருக்கு அறிவிக்கப்படும்.
இவ்வருடம் மின் துண்டிக்கப்பட்ட சம்பவங்கள் இயல்பானவை எனவும் இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.