மின்னல் தாக்கியதில் இருவர் உயிரிழப்பு..!
இரத்தோட்டை, வெல்கலய பிரதேசத்தில் மின்னல் தாக்கியதில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
12 வயது சிறுமியும் 23 வயதுடைய இளைஞன் ஆகியோரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
உயிரிழந்த இருவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதர, சகோதரிகள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் சடலங்கள் இரத்தோட்டை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், இரத்தோட்ட பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
![]()