மின்னியலாளர்களுக்கு இலவசமாக தேசிய தொழில் மட்டம் சான்றிதழ் (NVQ3) வழங்கும் நிகழ்வு!
இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு மற்றும் பொலிக்கரோம் நிறுவனத்தின் அனுசரணையுடன் திருகோணமலை மாவட்ட மின்னியலாளர்களுக்கு இலவசமாக தேசிய தொழில் மட்டம் சான்றிதழ் (NVQ3) வழங்கும் திட்டத்திற்கான விழிப்புணர்வு செயலமர்வு
திருகோணமலையில் அமைந்துள்ள JKAB ஹோட்டலில் நடைபெற்றது.
இதன்போது பிரதம அதிதியாக திருகோணமலை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.சுதாகரன் அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்.
மின் இணைப்புகளில் உங்களுக்கு இருக்கின்ற அனுபவங்களை அடிப்படையாகக் கொண்டு எதிர்காலத்திலே அதாவது குறுகிய காலத்திற்குள் இதற்குரிய பரீட்சைகளை உரிய தொழிற்பயிற்சி நிறுவனங்களின் ஊடாக பயிற்சியை வழங்கி அதற்குரிய சான்றிதழ்களை வழங்குவதன் ஊடாக சமூகத்திலே அங்கீகாரம் மற்றும் இந்த தொழிலை செய்வதற்குரிய ஒரு சான்றிதழ் உங்களுக்கு இதன் மூலம் கிடைக்கக்கூடியதாக இருக்கும் என திருகோணமலை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் இதன்போது தெரிவித்தார்.
இந்நிகழ்வில் இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் பணிப்பாளர் திரு. ஜயநாத் ஹேரத் மற்றும் உதவி பணிப்பாளர் திரு. ஜயசூரியன் மற்றும் திருகோணமலை மாவட்ட மின்னியலாளர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
![]()