ஜூலை 01 ஆம் திகதி முதல் புதிய மின் கட்டணங்கள் அமுலுக்கு வரலாம் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
நாடாளுமன்ற இன்றைய (06.06.2024) அமர்வில் கலந்து கொண்டு உரையாற்றிய அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை மின்சார சபை, மின் கட்டணத்தை குறைப்பது தொடர்பில், முன்மொழிந்துள்ளதாகவும் அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவிதார்.
இது தொடர்பான பிரேரணை எதிர்வரும் இரண்டு நாட்களில் இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
அத்துடன், இதற்கான அனுமதி கிடைத்தால், 2024 ஜூலை 01 முதல் புதிய மின் கட்டணங்கள் அமுலுக்கு வரலாம் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டார்.
இதன்படி, உத்தேச மின்சாரக் கட்டணங்களின் விபரங்களையும் அறிவித்தார்.
8 ரூபாயாக இருந்த 0-30 அலகுகள் 2 ரூபாயால் குறைக்கப்பட்டு 6 ரூபாயாக அறிவிக்கப்படும்.
20 ரூபாயாக இருந்த 30-60 அலகுகள் 11 ரூபாயால் குறைக்கப்பட்டு 9 ரூபாயாக அறிவிக்கப்படும்.
30 ரூபாயாக இருந்த 60-90 அலகுகள் 12 ரூபாயால் குறைக்கப்பட்டு 18 ரூபாயாக அறிவிக்கப்படும்.
50 ரூபாயாக இருந்த 90-120 அலகுகள் 20 ரூபாயால் குறைக்கப்பட்டு 30 ரூபாயாக அறிவிக்கப்படும்.