நாட்டில் நிலவும் மோசமான காலநிலை காரணமாக அதிகளவான பகுதிகளில் மின் விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கஞ்சன விஜயசேகர தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் தனது உத்தியோகபூர்வ எக்ஸ் (X) தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், “கடந்த 3 நாட்களில் 36,900 மின் கம்ப சேதங்கள் பதிவாகியுள்ளன.
இதன் காரணமாக 300,000இற்கும் அதிகமான வாடிக்கையாளர்களுக்கு மின் விநியோகம் வழங்குவது தடைப்பட்டுள்ளது.
இந்நிலையில், குறித்த பாதிப்புக்களை சீராக்குவதற்காக ஊழியர்கள், 24 மணிநேரமும் கடமையில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும், மின்சாரம் தடைபட்ட இடங்களுக்கு அடுத்த 24 மணித்தியாலங்களில் மின்சாரம் விநியோகிக்கப்படவுள்ளது.
அதேவேளை, மின்சார பாவனையாளர்கள், தங்களுக்கு ஏற்படும் பாதிப்புக்கள் தொடர்பில் 1987 என்ற அவசர தொலைபேசி இலக்கத்திற்கு அல்லது குறுஞ்செய்தி மூலம் தொடர்பு கொள்ளலாம்” என அமைச்சர் கஞ்சன விஜயசேகர சுட்டிக்காட்டியுள்ளார்.