மியன்மாரில் பயங்கரவாதிகளிடம் சிக்கியுள்ள இலங்கையர்களை மீட்பது தொடர்பில் குறித்த பயங்கரவாத குழுவுடனான பேச்சுவார்த்தை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
மியன்மார் உள்துறை அமைச்சரின் இணக்கப்பாட்டை தொடர்ந்து பேச்சுவார்த்தை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மியன்மாருக்கான இலங்கை தூதுவர் ஜானக்க பண்டார தெரிவித்துள்ளார்.
மியன்மாரின் , தாய்லாந்து எல்லையில் அமைந்துள்ள சைபர் குற்றப் பிரதேசம் என அடையாளப்படுத்தப்படுகின்ற இடத்தில் இலங்கையின் 56 இளைஞர், யுவதிகள் பலவந்தமாக தடுத்து வைக்கப்பட்டுள்ளமை தொடர்பாக தகவல் வெளியாகியுள்ளது.
முழுமையாக பயங்கரவாத குழுவொன்றின் கட்டுப்பாட்டில் உள்ளதால் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கையர்களை மீட்பதற்காக இலங்கைத்தூதரகம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுவருகிறது.