லிந்துலை மிளகுசேனை தோட்டத்தில் மின் ஒழுக்கில் ஏற்பட்ட கசிவு காரணமாக தீப்பரவல் ஏற்ப்பட்டுள்ளது.
குறித்த தீப்பரவல் 1ஆம் இலக்க லயன் குடியிருப்பில் நேற்று (4) இரவு 9 மணியளவில் ஏற்ப்பட்டுள்ளது.
மேலும் லயன் குடியிருப்பில் இருக்கும் ஒரு வீடு முழுமையாக சேதம் அடைந்துள்ளதுடன் 4 வீடுகளில் கூரைகளும் தீயினால் அழிவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன் காரணமாகக் குறித்த 5 வீடுகளிலும் வாழ்ந்த 5 குடும்பங்களைச் சேர்ந்த 41 பேர் தமது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீடுகளில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளதாகப் பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.
வீடுகளிலிருந்த ஒரு சில சொத்துக்களுக்கு மாத்திரம் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதாகவும் எவ்வித உயிர் ஆபத்துகளும் ஏற்படவில்லை என பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பான விசாரணைகளை லிந்துலை பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்.
Post Views: 2