மீசாலை நகுலன் சனசமூக நிலையத்தின் கலை கலாசார பண்பாட்டு விழா..!
தமிழர் பண்பாட்டு கிராமிய விளையாட்டு நிகழ்வு நேற்று (14/04/2025) நகைலன் சனசமூக நிலைய மைதானத்தில் சிறப்பாக இடம்பெற்றது.
சுமார் முப்பது ஆண்டுகளின் பின் மீள்குடியமர்தப்பட்ட இம் மக்களின் முதலாவது கலை கலாசார பண்பாட்டு விழாவாக இவ் விழா அமைந்தது சிறப்பம்சமாகும். இதன் போது சிறுவர்களுக்கான விளையாட்டுக்கள், கிடுகு இழைத்தல், சங்கீதக் கதிரை, ஆண், பெண் இரு பாலாருக்குமான கயிறிழுத்தல், தலையணைச் சண்டை முட்டியுடைத்தல் போன்ற சுவாரசியமான விளையாட்டுக்களும் இடம்பெற்றிருந்தது.

நகுலன் சனசமூக நிலைய தலைவர் மகாலிங்கம் மதுஷன் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் பிரதம விருந்தினர களாக மன்னார் மாவட் அரசாங்க அதிபரும் மீசாலை மண்ணின் மைதனுமான கனகசபாபதி கடகேஸ்வரன் மற்றும் வைத்தியர் சிவசாதனா தினேஸ், வைத்தியர் வினாசித்தம்பி கஜீபன் ஆகியோர் கலந்து கொண்டு பரிசில்களையும் வழங்கி கெளரவித்து வைத்தனர்.

[யாழ் நிருபர் – விஜய்குமார் லோஜன்]
![]()