Tamil News Channel

மீட்கப்பட்ட சுரங்கத் தொழிலாளர்கள்;அர்னால்ட் டிக்ஸிற்கு குவியும் வாழ்த்து

இந்தியாவின் உத்திரகண்ட் மாநிலத்தில் சில்க்யாரா சுரங்கத்தில் சிக்கிய 41 தொழிலாளர்களும் எவ்வித ஆபத்தும் இன்றி மீட்கப்பட்டுள்ளனர்.

உள்நாடு மற்றும் வெளிநாட்டைச் சேர்ந்த ஏராளமான மீட்பு குழுவினரின் உதவியுடன் இவர்கள் கடந்த செவ்வாய்க் கிழமை (28) மீட்கப்பட்டுள்ளனர்.

அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த பேராசிரியர் அர்னால்ட் டிக்ஸும் இந்த மீட்பு பணியில் ஈடுபட்டிருந்தார்.

சுவிட்சர்லாந்தை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் சர்வதேச சுரங்கப்பாதை மற்றும் நிலத்தடி கூட்டமைப்பின் தலைவராக செயற்படும் இவர் கட்டுமான ஆபத்துகள், பாதுகாப்பு செயல்திறன் தொடர்பான தொழில்நுட்ப சிக்கல்கள் ஆகியவற்றில் நிபுணத்துவம் பெற்றவர் ஆவார்.

இந்த மீட்புப் பணியில் உதவுவதற்காக அர்னால்ட் டிக்ஸ் கடந்த் 20 ஆம் திகதி அழைக்கப்பட்டார்.

நேற்றைய தினம் ஊடகவியலாளர்களிடம் பேசிய அவர், “ஆரம்பத்தில், இது விரைவாக நடக்கும் என்று நான் ஒருபோதும் உறுதியளிக்கவில்லை, இது எளிதாக இருக்கும் என்று நான் ஒருபோதும் உறுதியளிக்கவில்லை, அது நாளை நடக்கும் என்று நான் ஒருபோதும் கூறவில்லை. இன்றிரவு என்று கூறவில்லை. அவர்கள் கிறிஸ்துமஸ்க்கு வீட்டில் இருப்பார்கள், பாதுகாப்பாக இருப்பார்கள் என்று நான் சொன்னேன்” என்றார்.

“இந்திய அதிகாரிகளின் அற்புதமான சாதனை. அவுஸ்திரேலிய பேராசிரியர் அர்னால்ட் டிக்ஸ் மீட்பு பணியில் பங்கு வகித்தமைக்கு பெருமைப்படுகிறேன்” என அவுஸ்திரேலிய பிரதமர் தனது எக்ஸ் தளத்தில் வாழ்த்தியுள்ளார்.

மேலும், சுரங்க தொழிலாளர்கள் மீட்கப்பட்டது குறித்து, இந்தியாவுக்கான அவுஸ்திரேலியாவின் உயர்ஸ்தானிகர் பிலிப் கிரீன் தனது எக்ஸ் தள பக்கத்தில் அர்னால்ட் டிக்ஸை வாழ்த்தியுள்ளார்.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts