மீண்டும் அதிகரிக்கும் தங்கத்தின் விலை!
இலங்கை நகைக்கடை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்ததன்படி, இன்று (நவம்பர் 20) 24 கரட் தங்கத்தின் விலை ஒரு பவுண் ஒன்றிற்கு ரூ. 1,000 உயர்ந்து, 330,000 ரூபாய் ஆக விற்பனை செய்யப்படுகிறது.
நேற்றைய தினம் புதன்கிழமை 24 கரட் தங்கம் பவுண் ஒன்றின் விலை 329,000 ரூபாய் ஆக இருந்தது.
தற்போதைய விலை நிலவரம்:
- 24 கரட் தங்கம்: 1 பவுண் = 330,000 ரூபாய், 1 கிராம் = 41,250 ரூபாய்
- 22 கரட் தங்கம்: 1 பவுண் = 302,500 ரூபாய், 1 கிராம் = 37,813 ரூபாய்
இந்த உயர்வு நகை சந்தையில் விலை நிலவரத்தை சீரான நிலையில் வைத்திருக்கிறது என சங்கம் தெரிவித்துள்ளது.
![]()