ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், இலங்கை ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவுக்கான, தனது அதிகாரபூர்வ கடிதத்தை மீண்டும் வெளியிட்டுள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இலங்கை ஜனாதிபதி அனுரவின் பெயரை “அருண” என்று தவறாக ஆரம்பக் கடிதத்தில் குறிப்பிட்டிருந்தமை, இந்த கடிதத்தில் திருத்தப்பட்டுள்ளது.
2025, ஜூலை 9, திகதியிட்ட திருத்தப்பட்ட கடிதம், ஆகஸ்ட் 1 முதல், இலங்கை ஏற்றுமதிகளுக்கு 30% வரி விதிக்கும் அமெரிக்காவின் முடிவை மீண்டும் உறுதிப்படுத்துகிறது.



