மீண்டும் இயக்குநர் அவதாரம் எடுக்கும் எஸ்.ஜே சூர்யா; இணையும் ஏ.ஆர் ரஹ்மான்!
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் எஸ்.ஜே சூர்யா.
இவர் குறிப்பாக பல நட்சத்திர ஹீரோக்களுடன் வில்லனாக நடித்து வருகிறார்.
இவர் நடித்த பெரும்பாலான திரைப்படங்கள் வெற்றி திரைப்படங்களாக அமைந்துள்ளது.
இந்நிலையில் தற்போது எஸ்ஜே சூர்யா மீண்டும் இயக்குநர் அவதாரம் எடுத்துள்ளார்.
இவர் இயக்கும் படத்திற்கு கில்லர் என தலைப்பு வைத்துள்ளனர். படத்தின் பூஜை விழா சமீபத்தில் நடைப்பெற்றது.
இந்நிலையில் படத்தின் இசையமைப்பாளரை படக்குழு அறிவித்துள்ளது.
படத்திற்கு இசை புயல் ஏ.ஆர் ரஹ்மான் இசையமைக்கவுள்ளார்.

படக்குழு வெளியிட்ட போஸ்டரில் “நாம் இருவரும் சேரும் சமயம், நம் கைகளிலே வரும் இமயம். நாம் தொட்டது எதுவும் அமையும்.
இது அன்பால் இணைந்த இதயம்” என்ற வசனம் இடம்பெற்றுள்ளது.
எஸ் ஜே சூர்யா நடித்து இயக்கிய நியூ, அன்பே ஆருயிரே படத்திற்கு ஏ.ஆர் ரஹ்மான் இசையமைத்தது குறிப்பிடத்தக்கது.
இப்படத்தை ஸ்ரீ கோகுலம் மூவீஸ் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கிறது.
படத்தின் நாயகியாக ப்ரீத்தி அஸ்ரானி நடிக்கிறார். படத்தில் நடிக்கும் பிற நடிகர்களை பற்றிய தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
திரைப்படம் இந்தியா மற்றும் மெக்சிகோ ஆகிய பகுதிகளில் படமாக்கப்பட இருக்கிறது.
எஸ்ஜே சூர்யா அடுத்து சர்தார் 2 மற்றும் லவ் இன்சூரன் கம்பெனி ஆகிய திரைப்படங்களில் நடித்து முடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
![]()