ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தவிசாளராகவும் கட்சி உறுப்பினராகவும் செயற்படுவதற்கு அமைச்சர் விஜேதாச ராஜபக்ஸவிற்கு விதிக்கப்பட்ட இடைக்காலத் தடையுத்தரவு நேற்று (25.06) மீண்டும் நீடிக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொருளாளர், அமைச்சர் லசந்த அழகியவண்ண தாக்கல் செய்த மனுவை நேற்று(25.06) மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொண்ட போதே கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இவ் உத்தரவை பிறப்பித்துள்ளது.
பிரதிவாதிகளுக்கு ஆட்சேபனை தாக்கல் செய்வதற்கும் கால அவகாசம் வழங்குவதற்கு நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.
இதற்கிணங்க, எதிர்வரும் ஜூலை 9 ஆம் திகதி மனுவை மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
Post Views: 2