மீனவர் பிரச்சனை மீண்டும் தீவிரம்: இந்திய மீனவர்கள் 8 பேர் இலங்கை கடற்படையால் கைது!

0
1

இலங்கை கடற்படை ஞாயிற்றுக்கிழமை 8 இந்திய மீனவர்களை கைது செய்து, அவர்களின் இழுவை படகுகளை பறிமுதல் செய்ததாக அதிகாரப்பூர்வ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மன்னாரின் வடக்கில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது இந்தக் கைது நடவடிக்கைகள் இடம்பெற்றதாக கடற்படை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

8 மீனவர்களும் அவர்களது இழுவைப் படகும் மன்னாரில் உள்ள மீன்வள ஆய்வாளரிடம் சட்ட நடவடிக்கைகளுக்காக ஒப்படைக்கப்பட்டது என்று அந்த அறிக்கை குறிப்பிடுகின்றது.

நேற்றைய தினம் அதிகாலையில், இலங்கை கடல் எல்லைக்குள் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீன்பிடி படகுகள் குழு ஒன்றை வட மத்திய கடற்படை கட்டளைப் பிரிவு கண்டறிந்தது.

இதன் காரணமாக, மன்னாருக்கு வடக்கே உள்ள தீவுக் கடல் பகுதியில் இருந்து அந்த இந்திய மீன்பிடி படகுகளை விரட்டியடிக்க வட மத்திய கடற்படை கட்டளைப் பிரிவு தனது கரையோர ரோந்து படகுகளை அனுப்பியது, என்று கூறப்படுகின்றது.

இந்தியா மற்றும் இலங்கை ஆகிய இரு நாடுகளைச் சேர்ந்த மீனவர்கள், ஒருவருக்கொருவர் கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்ததற்காக அடிக்கடி கைது செய்யப்படுகிறார்கள்.

இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான உறவுகளில் மீனவர் பிரச்சினை ஒரு சர்ச்சைக்குரிய ஒன்றாகும், இலங்கை கடற்படையினர் பாக்கு நீரிணையில் இந்திய மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதுடன், தீவு நாட்டின் கடல் எல்லைக்குள் சட்டவிரோதமாக நுழைந்ததாகக் கூறப்படும் பல சம்பவங்களில் அவர்களின் படகுகளையும் பறிமுதல் செய்தனர்.

தமிழகத்தையும், இலங்கையையும் பிரிக்கும் குறுகிய நீர்ப் பரப்பான பாக்கு நீரிணை, இரு நாட்டு மீனவர்களுக்கும் வளமான மீன்பிடித் தளமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here