அக்கரபத்தனை பொலிஸ் பிரிவுக்கு உரிய ஹென்பொல்ட் தோட்டத்தின் டி.எல் பிரிவில் உள்ள தொடர் வீட்டு குடியிருப்புக்களுக்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கரவண்டியில் இருந்து கடும் துர்நாற்றம் வீசியதை தொடர்ந்து முச்சக்கரவண்டி சாரதியின் தாய், முச்சக்கரவண்டியை சோதனையிட்ட போது முச்சக்கரவண்டியின் பின் பகுதியில் இருந்து சிசுவின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
முச்சக்கரவண்டியின் சாரதி அதே தோட்டத்தில் வசிப்பவர் எனவும், அவர் முச்சக்கரவண்டியில் பயணமொன்றை மேற்கொண்டு இன்று (10.09) காலை தனது வீட்டிற்கு வந்து நிறுத்தியுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக அக்கரபத்தனை பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
சிசுவின் சடலம் தொடர்பில் நுவரெலியா நீதவான் நீதிமன்றில் அறிக்கை தாக்கல் செய்து நீதவானின் உத்தரவுக்கு அமைய மேலதிக விசாரணைகளை மேற்கொள்வதாக அக்கரபத்தனை பொலிஸ் அதிகாரி மேலும் தெரிவித்துள்ளார்.