முச்சக்கரவண்டி சாரதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை..!
மேல் மாகாணத்தில் பயணிகள் போக்குவரத்தில் ஈடுபடும் முச்சக்கரவண்டிகளில் மீட்டர் கருவியினை பொருத்துவது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக மேல் மாகாண வீதி பயணிகள் போக்குவரத்து அதிகார சபை தெரிவித்துள்ளது.
எதிர்வரும் ஜூலை மாதம் முதலாம் திகதி முதல் இந்த நடைமுறை அமுலில் இருக்கும் எவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை மீறி கைப்பேசி செயலியை பயன்படுத்தி, பயணிகள் போக்குவரத்தில் ஈடுபடும் முச்சக்கரவண்டி சாரதிகளுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மேல் மாகாண வீதி பயணிகள் போக்குவரத்து அதிகார சபை குறிப்பிட்டுள்ளது.
![]()